திருகோணமலை - சீனக்குடா, ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இனம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.
ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த எச்.டபிள்யூ.பிரசன்ன (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






No comments