மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக, மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்தத் தடை அமுல்படுத்தப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது விடயமாகப் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும், மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சியைக் கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.






No comments