Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கால்கோள் விழா!


யாழ்.தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் நடாத்திய 'தரம் ஒன்று' மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் "கால்கோள் விழா" சாவகச்சேரி நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

வித்தியாலய முதல்வர் தர்சினி வசந்தமாறன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தென்மராட்சி கல்வி வலய ஆரம்பக் கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் சிவராசா சுந்தரலிங்கம், ஆசிரிய வான்மை விருத்தி மத்திய நிலையத்தின் முகாமையாளர் மங்கள கல்யாணி சிவனேசன்,  தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் இராசலட்சுமி மயில்வாகனசிங்கம், பழைய மாணவர் சங்க செயலாளர் கதிர்காமநாதன் குகானந்தன், பழைய மாணவன் சண்முகலிங்கம் ரஞ்சித் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

முதலில், தரம் இரண்டு மாணவர்களால், தரம் ஒன்று மாணவர்கள் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் சபையைக் கவர்ந்தன.











No comments