யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலை அதிபர் பா.யசிதரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்திரனாக ஓய்வு பெற்ற கல்வியாளர் கனகர் இரத்தினம் கமலநாதன் கலந்து கொண்டார்.
முதன்முதலில் பாடசாலைக்கு காலடி எடுத்துவைக்கும் நாள் மாணவர்களின் நினைவில் பதியக்கூடியதாக இந்த கால்கோள் விழா ஒழுங்கு செய்யப்படும்.
இந்த நாளில் முதலாம் தர மாணவர்களை 2ஆம் தர மாணவர்கள் வரவேற்பார்கள். அத்துடன் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்













No comments