அயல் வீட்டுக்காரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அயல் வீடான இரு வீட்டார் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தில் பெண்ணொருவர் அயல் வீட்டார் மீது கத்தி குத்து தாக்குதல் நடாத்தியுள்ளார்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்







No comments