திருகோணமலையில் மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு , தென்னிந்திய கலைஞர்களுடன் நம் நாட்டு கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளன.
திருகோணமலை நகரில் உள்ள Mc Heyzer மைதானத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு அந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
Platinum Promotions தலைவர் குமார் ஜெயகுமரன் வழங்கும்இந்த 3 நாள் மெகா விழாவில் இந்திய பாடகர்கள், தேசிய அளவிலான கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இசை நிகழ்வு மாத்திரமின்றி காலையில் உணவு திருவிழா , சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் நிகழ்வுகள் அடங்கிய கார்னிவல் நிகழ்வுகள் இடம்பெற்று இரவு இசை நிகழ்வுகள் இடம்பெறும்.
அந்த வகையில் எதிர்வரும் 13 ஆம் திகதி இசையும் ஒற்றுமையும் நிறைந்த இரவாகவும் , 14ஆம் திகதி காதலர் தினத்தினை முன்னிட்டு, காதலும் இசையும் நிறைந்த சிறப்பு இரவு இசை நிகழ்வும் மறுநாள் 15ஆம் திகதி இரவு மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு தெய்வீகத்தால் நிறைந்த மாபெரும் இசை நிகழ்வு இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுக்கு அனைவரும் வருகை தந்து நிகழ்வினை கண்களிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.







No comments