நிட்டம்புவ பகுதியில் சுமார் 900 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 61 கிலோ 838 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.







No comments