யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , அராலி பகுதியை சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் அவர்களின் உடைமையில் இருந்து 05 மற்றும் 39 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







No comments