பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று சனிக்கிழமை (10) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 385 கிராம் ஹெரோயின், 459 கிராம் ஐஸ், 05 கிராம் கொக்கெய்ன், 499 கிராம் கஞ்சா, 4,358 கஞ்சா செடிகள், 04 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 26 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 3,376 போதை மாத்திரைகள், 02 கிலோகிராம் 954 கிராம் மதனமோதகம் மற்றும் 04 கிலோகிராம் 992 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 829 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.
அத்துடன், 830 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 11 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது







No comments