தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவியுங்கள் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ். நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார்.
நாக விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாக விகாரையின் விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விகாராதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கூ பல பிரச்சனைகள் இருக்கிறது. அந்த வகையில் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனையை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
பொதுமக்களுடைய காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது.
விகாரை பக்கத்தில் உள்ள மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி விரைவாக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். எனக்கும் இந்த காணிக்கும் எதுவிதமான சம்பந்தமும் இல்லை. நயினாதீவு நாக விகாரை விகாராதிபதிக்கே அங்கு தொடர்புண்டு. ஆனால் பொதுமக்கள் சார்பாக இந்த கருத்தை முன் வைத்தேன்.
மேலும் போதைவஸ்து பிரச்சினைகள் காணப்படுவதால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பிரச்சனைகள் காணப்படுகிறது. ஆகவே வடக்கு மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற விடயத்தை தெரிவித்தேன் - என்றார்.







No comments