தைத் திருநாளை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட செயலர் எஸ். முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி மற்றும் தூதரக அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொங்கலுக்குரிய பொருட்களை வழங்கி வைத்தனர்.










No comments