ஜனவரி 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (19) நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஊடாக, வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறாததினால் வைத்திய சமூகத்திற்குள் கடும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியதன் மூலம், தாம் மேற்கொள்ள உத்தேசித்திருந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுகின்றது.
எவ்வாறாயினும், உரிய கலந்துரையாடல்கள் இடம்பெறாமை மற்றும் இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாமை காரணமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.







No comments