சட்டவிரோதமான முறையில் 3 கோடியே 40 இலட்ச ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
துபாயில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை திரும்பியவரின் பயண பையினை சோதனையிட்ட போது விலையுர்ந்த ஆப்பிள் மற்றும் சாம்சங் கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனை அடுத்து கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்தவரை கைது செய்த சுங்க அதிகாரிகள் , அவரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , கடத்தி வரப்பட்ட தொலைபேசிகளின் பெறுமதி சுமார் 3 கோடியே 40 இலட்ச ரூபாய் என தெரிவித்தனர்.







No comments