யாழில் தலையில் தேங்காய் விழுந்தலால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார். இதன்போது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது.
அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.







No comments