நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினர்.
இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரை ஏற்கனவே இருந்த காணியையும் பார்வையிட்டுச் சென்றனர்.









No comments