யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அராலி பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 21 கால் போத்தல் சாராயம் மீட்கப்பட்டுள்ளது.
ஒரு கால் போத்தல் சாரயத்தை ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments