Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காலி நீதிமன்றத்தில் தீ


காலி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

குறித்த இடத்தில் தீ பரவியதையடுத்து, இது தொடர்பில் காவல்துறை அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையும், காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக்  கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காலி நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தேவையற்ற கடதாசிகள் சிலவற்றை தீ வைத்து எரித்த போது தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறிருப்பினம் தீ பரவலின் போது நீதிமன்ற ஆவணங்களுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments