யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் கேரளா கஞ்சாவை எடுத்து சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது, முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்து சோதனை செய்த வேளை , அதற்குள் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து , முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த இளைஞனை கைது செய்து , கைது செய்த இளைஞனையும் , முச்சக்கர வண்டி மற்றும் மீட்கப்பட்ட கஞ்சா என்பவற்றை மேலதிக நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.







No comments