Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறல் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் ,  அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர் , படகினை அங்கு தடுத்து வைத்துள்ளதுடன் , கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments