நெடுந்தீவில் விசக்கடிக்குள்ளான பெண்ணொருவர் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால், நெடுந்தீவு - குறிக்கட்டுவான் இடையிலான படகு சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் அம்புலன்ஸ் படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெடுந்தீவில் இன்றைய தினம் விசக்கடிக்குள்ளான நிலையில் நெடுந்தீவு பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்ற விமானப்படையின் உதவி நாடப்பட்டு, உலங்குவானூர்தி ஊடாக போதான வைத்திய சாலைக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.







No comments