தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி மீண்டும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது கடந்த 2021ஆம் ஆண்டளவில் , புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் , தொடர்ந்து நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்திக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அந்நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , பருத்தித்துறை பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












No comments