மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் பனியுடனான வானிலையால் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவான பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் - நுவரெலியா மற்றும் ஹட்டன் - கொழும்பு வீதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள துணை வீதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தெளிவான பார்வையைப் பெற வாகனத்தின் ஹெட்லைட்களை இயக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




.jpg)


No comments