யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டியிருந்த நிலையில் , மைதானத்தில் நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பமாகி , எதிர்வரும் 14ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பணிகள் கால தாமதமாகிய நிலையில் , மீண்டும் பணிகள் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மைதானம் அமையவிருக்கும் பிரதேசம் நீரேந்து பிரதேசம் எனவும் , வலசை பறவைகள் உள்ளிட்ட பறவைகள் வரும் ஒரு பறவைகள் சரணாலயம் போன்ற பிரதேசத்தில் மைதானம் அமைக்கப்படுவதால் சுற்று சூழலுக்கு பாதிப்பு என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





.jpg)







No comments