Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பெண் படுகொலை - படுகொலை செய்தவர் உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வைத்தியசாலையில்


பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த நபர் , தனது கழுத்தினை வெட்டி உயிர் மாய்க்க முயன்ற நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிபில பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண்ணை படுகொலை செய்த நபரும் , தனது உயிரை மாய்க்கும் நோக்குடன் , கழுத்தில் வெட்டிய நிலையில் மீட்கப்பட்டு , பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இருவருக்கும் இடையில் தகாத உறவு இருந்ததாகவும் , உறவு நிலைக்குள் முரண்பாடு ஏற்பட்ட நிலையிலையை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது 

சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

No comments