முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தலையில் அடிகாயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கரடிப்புலவு பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்துடன் அவரது துவிச்சக்கர வண்டியும் காணப்பட்டது.
அதன் அடிப்படையில் , குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எவரேனும் பின் புறமாக தலையில் பலமாக தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments