கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ண போட்டியை பார்வையிட இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த ஏராளமான உயர்மட்ட கிரிக்கெட் ரசிகர்கள் 15 சிறப்பு தனியார் ஜெட் விமானங்களில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களில் பாகிஸ்தான் விளையாட்டு துறை அமைச்சர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜே. ஷா மற்றும் பல கோடீஸ்வர தொழிலதிபர்கள் அடங்குவர்.
தனியார் ஜெட் விமானங்களின் வருகையை எளிதாக்குவதற்கும், வருகை தரும் ரசிகர்களுக்கு சுமூகமான, குடிவரவு மற்றும் சுங்க அனுமதியை உறுதி செய்வதற்கும் விமான நிலைய அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







.jpg)





No comments