எதிர்க்கட்சிக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன.
கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இச்சந்திப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தரம் குறைந்த நிலக்கரி விவகாரம், பாதாள உலகக் கொலைகள் மற்றும் எரிவாயு பிரச்சினை தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில் உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜீ.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரள, பிரேம்நாத் சி. தொலவத்த, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







No comments