Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

போக்குவரத்து மானியத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்


தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தி வரும் போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்தில் நடைபெற்றது. 

அதன் போது, உள்ளூர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சேவையை வழங்கும் நோக்கில் குறித்த கலந்துரையாடலும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.

மாணவர்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தி  முறைப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடசாலை பேரூந்து சேவை (Sisu Sariya), கிராமப்புற பேரூந்து சேவை (Gami Sariya), இரவு நேர பேரூந்து சேவை (Nisi Sariya) திட்டங்களின் போக்குவரத்து வழிகாட்டிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் 'சிசு சரிய' பாடசாலைப் பேருந்து சேவையை அதிக வினைத்திறனுடனும், பயனுள்ள முறையிலும் யாழ் மாவட்டத்தில் விரிவுபடுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பங்குபற்றுனர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் திறந்த வெளிக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது  போக்குவரத்து அட்டவணை ஒழுங்குபடுத்தல் மற்றும்  சீரமைப்பு, பாதுகாப்பு நடைமுறைகள், பயணிகளின் நலன் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் போன்றன தொடர்பில்  கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  

  நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட   பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட போக்குவரது ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர்  எஸ்.விமலேஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது  

No comments