Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கு கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் - அரசாங்கத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்ய ஒன்றிணையுங்கள் !


தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

படிப்படியாக நாங்கள் காணிகளை இழந்து வருகிறோம். கிழக்கு மாகாணத்தில் பெரியளவு காணி இழக்கப்பட்டு இருக்கிறது. 

வடக்கு மாகாணத்திலும் அந்த விடயங்கள் பல்வேறுபட்ட இடங்களில் நடந்துள்ளது. நடக்கிறது.

எனவே அனைத்து தமிழ் மக்களும் அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு ஆதரவாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

No comments