கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 27 வயதான தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், தனது வேலை நிமித்தம் நீர்கொழும்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்துள்ளார்.
அந்த வீட்டில் இருந்த பழுதடைந்த மின்விசிறியைத் திருத்த முற்பட்டபோதே மின்சாரம் தாக்கியுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது,
சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்







No comments