ஊர்காவற்றுறை துறைமுகம் மற்றும் கப்பல் பழுது பார்க்கும் பகுதி ஆகிவற்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
அதன் போது, காரைநகர் - ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைப்பது, துறைமுக அபிவிருத்தி, ஊர்காவற்றுறையில் இருந்து காரைநகர் கடற்கோட்டைக்கு பயணிகள் செல்வதற்கான வழிவகைகள், துறைமுகத்திற்கு அருகில் பாவிக்கப்படாது காணப்படும் காணிகளை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தல் மற்றும் எதிர்கால சுற்றுலா வசதிகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.










No comments