Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் - பவானந்தராஜா எம்.பி நம்பிக்கை


நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். 

வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான நிமலன் என்பவரை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான முக்கிய நகர்வுகளையும் எடுத்து வருகிறது.

அந்நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருவதுடன் அவர்களது கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்து , உரிய தரப்புக்களுக்கு அவை தொடர்பில் அறிவித்துள்ளேன். 

கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு சென்று .  அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினேன். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் மிக விரைவில் சாத்தியமாகும் என தான் நம்புவதாக மேலும் தெரிவித்தார் . 

No comments