Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெற்கில் தொடரும் துப்பாக்கி சூடுகள் - நேற்றும் இருவர் உயிரிழப்பு ; நால்வர் படுகாயம்


தென்னிலங்கையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொழும்பு ஜிந்துப்பிட்டிய பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள நிலையில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை களுத்துறை வடக்கு பொலிஸ் எல்லைக்குட்பட்ட வாடியமங்கட பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார். 

துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் அநாதரவான நிலையில் வயல் வெளி ஒன்றில் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments