யாழில். பங்கசு தொற்றுடைய "கட்டை தூளை" உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் , 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை குறித்த கட்டை தூளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டு , கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிகண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகரான மதியானந்தகுரு நந்தகுமார் வியாபர நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , பங்கஸ் தொற்றுடன் கட்டை தூளை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கும், குறித்த கட்டை தூளை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது. விற்பனையாளரும் , உற்பத்தியாளரும் மன்றில் முன்னிலையாகிய நிலையில் , தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.
அதனை அடுத்து விற்பனையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. தொடர்ந்து உற்பத்தியாளரை கடுமையாக எச்சரித்த மன்று உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்ததுடன் 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.







No comments