வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரணை இலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய நபரையும், அவருடைய 25 வயதுடைய மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







No comments