கொழும்பு - ஹோமாகம பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 வயது சிறுமி இன்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
மாகம்மன சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த சிறுமியே கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயின் காதலன், சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ள நிலையில் சுகயீனமுற்ற சிறுமி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தாயின் காதலன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் சிறுமியின் தாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம்தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தேகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







No comments