Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாகாணத் தேர்தல் இவ்வருட இறுதியில்?


நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. 

அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த உத்தேசித்த மாகாண சபைத் தேர்தலில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்று  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூடவுள்ளது.

இக்கூட்டத்தின் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது அரச தரப்பால் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், குறித்த குழுவின் பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது ஆகியன பிரதான நிபந்தனைகளாக உள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அதற்கு முன்னதாகவே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments