Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் நாட்டிற்கு அழைத்து வாருங்கள் - உறவினர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை


யாழில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் இலங்கை அழைத்து வர உரிய தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படகொன்றில் கடற்தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்களும் காணாமல் போன நிலையில் 6 நாட்களின் பின்னர் இந்தியாவில் கரையொதுங்கிய நிலையில் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இரு கடற்தொழிலாளர்களையும் , அவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் மீள இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்பினர்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments