யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழிலுக்காக படகொன்றில் இரண்டு கடற்தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன இருவரையும் , உறவினர்கள் தேடி வந்த நிலையில் , காணாமல் போன இருவரும் பயணித்த படகு கடலில் பழுதடைந்த நிலையில் இருவரும் கடலில் தத்தளித்த வேளை , அவர்களை மீட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் அவர்களுக்கு உணவளித்து , அவர்களை படகுடன் இலங்கை கடற்பரப்புக்கு அழைத்து வந்து விட்டு சென்றனர்.
அந்நிலையில் மீண்டும் அவர்களின் படகு நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு இந்திய கரையில் கரையொதுங்கிய நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.







No comments