பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பலநாள் மீன்பிடி படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்படி படகு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நிலையில் , அதனை கைப்பற்றி கரைக்கு கொண்டுவந்தனர்.
அதன் போது குறித்த மீன்பிடி படகில் 123 கி.கி ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாகவும், அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 300 மில்லியன் என்றும் படகில் இருந்த 5 நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்













No comments