Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ


கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த படகொன்றும் தீயில் எரிந்துள்ளது.

பொலிஸ் நிலைய வளாகத்தில் காணப்பட்ட குப்பைகளை இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை வேளை பொலிஸார் எரித்த வேளை அந்த தீ பரவி பெயர் பலகை , படகு மற்றும் அருகில் நின்ற மா மரம் என்வற்றில் பற்றி எரிந்தது.

அதனை அடுத்து பொலிஸார் தீயணை அணைக்க நடவடிக்கை எடுத்ததுடன், யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து தீயிணை அணைத்தனர்.

No comments