ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பட்டறையொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் ஒருங்கிணைப்பிலும், டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் ஒருங்கிணைப்பிலும் யாழில் உள்ள தனியார் விடுதியில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித் தொடரில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருந்தவநாதன் அனோசன் உள்ளிட்ட கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.















No comments