Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கத்திக்குத்து - இளைஞன் படுகாயம்


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநகர் பகுதியில் இரு இளைஞர்களும் போதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றையவர் மீது சரமாரியாக குத்தியுள்ளார். 

அதில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதலுடன் தொடர்புடைய இளைஞனை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments