Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை!


ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று  கூறியுள்ளார்.

அந்நிபந்தனைகள் எவை என்பதைக் கூற மறுத்த ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிடும் அர்ப்பணிப்பு அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய மையமான 'கார்க்' (Kharg) தீவை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், வேடிக்கைக்காக அமெரிக்கா இன்னும் சில தடவைகள் அந்த இடத்தைத் தாக்கக்கூடும் என்றும் இதன்போது கூறியுள்ளார்.

No comments