Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிப்பு


எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் அவசர ஒப்பந்தம்  செய்து கொள்ள அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் நேரடி இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை இலங்கை முன்னெடுத்துள்ளது.

இதன்போது, வழமையான கேள்விப்பத்திர நடைமுறைகளைத் தவிர்த்து, அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) உடன்படிக்கையின் கீழ் இந்த எரிபொருள் கொள்வனவை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் கோரிக்கைகளுக்கு இந்தியாவும் ரஷ்யாவும் சாதமான பதிலை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களை எந்த நாணய அலகில் மேற்கொள்வது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

யுக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யாவின் டொலர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், தேசிய நாணய அலகுகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா முன்னுரிமை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments