Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

604 லீற்றர் பெற்றோலுடன் வர்த்தகர் கைது


அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் 604 லீற்றர் பெற்றோலைச் சேகரித்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் பொலன்னறுவை, மீகஸ்வெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சில்லறை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மெதிரிகிரிய, மீகஸ்வெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இந்த பெற்றோல் கையிருப்புகளைச் சேகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவை சேகரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments