யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகை கஞ்சாவும் , சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றிணையும் மீட்டதாகவும் , அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்பஸ்தரை கைது செய்ததாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









No comments