Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரவில் தேவையற்ற மின் பயன்பாட்டை தவிருங்கள்


எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனை இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபை தலைவர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டாரா தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் இலங்கை போன்ற நாடுகளுக்கு எரிபொருட்களைப் பெறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், கடந்த காலங்களில் பொதுமக்கள் மின்சாரத்தைச் சேமிக்க வழங்கிய ஒத்துழைப்பைப் போலவே, இம்முறையும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக இரவு 6 மணி முதல் 10 மணி வரை மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால், அச்சமயத்தில் தேவையற்ற மின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகள் இயங்காததும், பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் அதிகமாக கிடைப்பதும் காரணமாக, சமையல், துணி துவைத்தல் மற்றும் இஸ்திரி செய்தல் போன்ற பணிகளை பகலில் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments