சீரணி நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த திருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
மஞ்ச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து "அம்மன் அருளால் நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில் பக்தர்களுடன் இணைந்து வழிபட்டது மனதிற்கு பேரானந்தத்தையும் ஆன்மிக நிறைவையும் அளித்தது. நம் சமய மரபுகளையும், பண்பாட்டு பாரம்பரியத்தையும் காக்கும் இத்தகைய திருவிழாக்கள் சமூக ஒற்றுமையையும் மனித நேயத்தையும் வலுப்படுத்துகின்றன. அனைவருக்கும் நாகபூசணி அம்மன் அருள் எப்போதும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.









No comments