கிளிநொச்சியில் 50ஆயிரம் ரூபாய்க்கு பெண் குழந்தையை விற்பனை செய்த குழந்தையின் சிறிய தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோரும் , குழந்தையை வாங்கிய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் தனது கணவருடன் இணைந்து , தமது பெறாமகளான இரண்டு வயது பெண் குழந்தையை தமது குடும்ப சூழ்நிலை காரணமாக 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு குழந்தையை கையளிப்பதாகவும் , எக்காரணத்திலும் குழந்தையை மீள பெற மாட்டோம் என்றும் , குழந்தையை வாங்கிய பெண் தான் விரும்பும் பட்சத்தில் குழந்தையை காட்ட விரும்பினால் மாத்திரம் குழந்தையை பார்வையிட முடியும் என கடிதம் எழுதிக்கொடுத்து விற்பனை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த தர்மபுரம் பொலிஸார் , குழந்தையை வாங்கி சென்ற பெண்ணை கைது செய்ததுடன் , குழந்தையையும் மீட்டதுடன், குழந்தையை விற்பனை செய்த குழந்தையின் சிறிய தாய் மற்றும் சிறிய தந்தை ஆகிய இருவரையும் கைது செய்தனர்
தற்போது மீட்கப்பட்ட குழந்தை பொலிஸ் பராமரிப்பில் உள்ள நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்,.









No comments